'மாஸ்டர்' நடிகர் Advice - ''மொரட்டு சிங்கிள்ஸ் ஒரு குட்டிக் கத பாட்டு வரும்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், காதலர் தின வாழ்த்துகள் மக்களே. உங்களால் முடிந்த வரை அன்பை பகிருங்கள்.

Thalapathy Vijay, Vijay Sethupathi, Lokesh Kanagaraj, Anirudh's Master Shanthnu Tweets about Valentines Day

Couples லவ் பண்ணுங்க, ஜாலியா இருங்க, மொரட்டு சிங்கிள்ஸ் வாழ்க்கைய இப்போவே என்ஜாய் பண்ணுங்க.  மொரட்டு சிங்கிள்ஸ் ஒரு குட்டிக் கதைக்கு வெய்ட் பண்ணுங்க'' என்று குறிப்பிட்டுள்ளார்.  'மாஸ்டர்' படத்தில் தளபதி விஜய் பாடியுள்ள ஒரு குட்டிக் கத பாடல் இன்று ( பிப்ரவரி 14 ) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இதன் முன்னோட்டமாக அனிருத், நேற்று மாலை ஒரு குட்டிக் கத பாடலின் பீட் பற்றி வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வேற லெவல் வைரலானது. எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வரும் இந்த படம் ஏப்ரல் மாதம் திரைக்குவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor