www.garudabazaar.com

ரொம்ப நாள் கழிச்சு இந்தி படத்துல…. ’ராக்ஸ்டார்’ அனிருத் பகிர்ந்த வைரல் story !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெர்ஸி திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

Anirudh composed for bollywood movie jersey after longtime

Also Read | சமந்தாவின் morphed புகைப்படம்…. விஜய் தேவரகொண்டாவின் சேட்டை… viral pic!

நானியின் ஜெர்ஸி…

சித்தாரா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கவுதம் தின்னானுரி இயக்கத்தில் கிரிக்கெட் வீரராக நானி நடித்த திரைப்படம் ஜெர்ஸி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார்.

இப்படத்தில் பிரம்மாஜி, சுப்பாராஜு, சத்யராஜ், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.  ராக்ஸ்டார் அனிருத் இசையில் இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இப்போது இந்தியில் இந்த படம் ரீமேக் ஆகியுள்ளது.

Anirudh composed for bollywood movie jersey after longtime

ஷாகித் கபூரின் ஜெர்ஸி…

முன்னதாக அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார் ஷாகித் கபூர். அதையடுத்து இப்போது அவர் நடிப்பில் ஜெர்ஸி திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய கௌதமே இயக்கியுள்ளார். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரமே ரிலீஸ் ஆக இருந்த திரைப்படம் ஒரு வாரம் தாமதமாக தற்போது ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்துள்ளார் அனிருத். மேலும் சில பாடல்களிலும் அவர் பணிபுரிந்துள்ளார். அனிருத் டேவிட், படத்துக்குக் கடைசியாக நேரடியாக இந்தியில் பணிபுரிந்திருந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் இசையமைத்த பல படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு அந்த பாடல்களும் ஹிட்டாகின.

Anirudh composed for bollywood movie jersey after longtime

இந்திப் படத்தில் அனிருத்…

ஆனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனிருத் மீண்டும் நேரடியாக இந்தி படத்தில் பணியாற்றியுள்ளார். இதுபற்றி அவரின் சமூகவலைதளப் பதிவில் “ ஜெர்ஸி படத்தின் சில பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம். தியேட்டரில் இந்த உணர்ச்சிப் பூர்வமான ரோலர் கோஸடரை கண்டு களியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

Anirudh composed for bollywood movie jersey after longtime

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ரொம்ப நாள் கழிச்சு இந்தி படத்துல…. ’ராக்ஸ்டார்’ அனிருத் பகிர்ந்த வைரல் STORY ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anirudh composed for bollywood movie jersey after longtime

People looking for online information on Anirudh, Anirudh compose bollywood Movie, அனிருத், Bollywood Movie, Jersey Movie will find this news story useful.