www.garudabazaar.com

AK61 போஸ்டரைப் பகிர்ந்து விக்னேஷ் சிவனின் வைரல் இன்ஸ்டா பதிவு! குஷியான அஜித் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் AK 61 படத்தின் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் வைரல் பதிவை இட்டுள்ளார்.

Ajith Kumar AK 62 Vignesh Shivan Instagram Story Goes Viral

கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது.

Ajith Kumar AK 62 Vignesh Shivan Instagram Story Goes Viral

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் துவங்கி உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. போனிகபூர் Behindwoods சேனலுக்கு அளித்த பேட்டியில், AK61 நெகட்டிவ் ரோல் பற்றிய கேள்விக்கு. ரசிகர்களாக முடிவு செய்ததாகவும், AK61 படம் Adventure ஆகவும், ரசிகர்களை ஆர்வத்தை கிளப்பும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார்.

Ajith Kumar AK 62 Vignesh Shivan Instagram Story Goes Viral

61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Ajith Kumar AK 62 Vignesh Shivan Instagram Story Goes Viral

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், AK61 படத்தின் ரசிகர் உருவாக்க போஸ்டரை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து Fire-ma என தெரிவித்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK 62 Vignesh Shivan Instagram Story Goes Viral

People looking for online information on Ajith Kumar, AK, AK61, AK62, Lyca, Valimai, Vignesh shivan will find this news story useful.