www.garudabazaar.com

ஜீவி படத்தின் இரண்டாம் பாகம்.. வெளிவந்த டெரரான FIRST LOOK போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Jiivi 2 Movie First Look Poster Released and went Viral

Also Read | முதல்முறையாக ரன்பீர் கபூருக்கு ஜோடியான பிரபல தமிழ் சினிமா நடிகை..! இது வேறலெவல் சம்பவம்

8 தோட்டாக்களுக்கு பிறகு நடிகர் வெற்றி, மீண்டும் ஹீரோவாக களமிறங்கிய படம் 'ஜீவி'. இந்த படத்தில் ஹீரோ வெற்றி, கடை ஒன்றில் பணியாளராக வேலை செய்வார். அவருக்கு ஏற்படும் காதல் தோல்வி, வாழ்வில் முன்னேற்றமில்லாமை போன்றவற்றால் அவருக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆகியவை முதற்பாதி கதையில் நகரும்.

ஒரு நாள் அவரும் அவர் நண்பர் கருணாகரனும் இணைந்து அவர்களது வீட்டின் உரிமையாளர் வீட்டில் இருந்து நகைகளை கொள்ளையடித்து அதனை மறைக்க முயல்வார்கள்.  அதனால் ஏற்படும் பின் விளைவுகளே இந்த படத்தின் மீதிக்கதை. முக்கோண விதியை அடிப்படையாக கோண்டு, அடுத்து என்ன நடக்கும் என்று சஸ்பென்ஸ் திரில்லருக்கு தேவையான திரைக்கதையால் ஜீவி திரைப்படம் நல்ல அங்கீகாரத்தை பெற்றிருந்தது.

Jiivi 2 Movie First Look Poster Released and went Viral

வெற்றி, மோனிகா, கருணாகரன், மைம் கோபி நடிக்க, இந்த படத்தை இயக்குநர் கோபிநாத் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜீவி-2 படத்தையும் கோபிநாத் இயக்கி உள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

Jiivi 2 Movie First Look Poster Released and went Viral

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் எடிட்டராக பிரவின் கே.எல்லும், DOPயாக பிரவீன் குமாரும் பணியாற்ற, சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

Jiivi 2 Movie First Look Poster Released and went Viral

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ஜீவி படத்தின் இரண்டாம் பாகம்.. வெளிவந்த டெரரான FIRST LOOK போஸ்டர்! வீடியோ

Jiivi 2 Movie First Look Poster Released and went Viral

People looking for online information on ஜீவி, Jiivi 2 Movie, Jiivi 2 Movie First Look Poster Release will find this news story useful.