'தளபதி 64' First Look ஒரு பக்கம் இருக்கட்டும், தளபதியோட Name என்ன தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 31, 2019 08:27 AM
நடிகர் விஜய் தற்போது 'தளபதி 64' ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ( டிசம்பர் 31) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானதில் இருந்து எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்க, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், பிரேம், ஸ்ரீமன், விஜய் டிவி புகழ் தீனா, விஜே ரம்யா, கௌரி கிஷன் உள்ளிட்டோர் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய்யின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்கிற ஜேடி என்று தெரியவந்துள்ளது.