விஜய் சேதுபதியின் அடுத்த 'மாஸ்டர்' பிளான் ! - சென்னையில் தொடக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 02, 2020 05:04 PM
விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று துக்ளக் தர்பார். வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ,மஞ்சிமா மோகன் நடித்து வருகின்றனர். நடிகர் பார்த்திபன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னையில் இன்று முதல் துவங்குகிறது. 15 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.