தளபதி, சூப்பர் ஸ்டாரைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 31, 2019 09:59 AM
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இதனையடுத்து விஜய் மற்றும் விஜய் சேதுபதியை ஒரே படத்தில் காண ரசிகர்களாக ஆவலாக இருக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து பல்வேறு படங்களில் பஸியாக நடித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக வருத்தப்படா வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களின் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
Tags : Vijay Sethupathi, Ponram, Sun pictures