வெறித்தனம் ! விஜய்யின் தளபதி 64 Second Look Poster டீட்டெயில்ஸ் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் குறித்த நடிகர், நடிகைகளின் சமூகவலைதள பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது.

Exclusive details about Thalapathy 64 second look about Vijay and Vijay Sethupathi

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, விஜய் டிவி புகழ் தீனா, ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், விஜே ரம்யா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது விடுப்பில் இருக்கும் தளபதி விஜய், ஜனவரி 1வது வாரம் தொடங்கி 3வது வாரம் வரை சென்னையின் பிரபல ஸ்டுடியோவில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் செக்கண்ட் லுக் 2020 ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. செக்கண்ட் லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும்  என்று எதிபார்க்கப் படுகிறது.

Entertainment sub editor