'தளபதி விஜய், விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா' - ராஷ்மிகாவின் க்யூட்டான பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 25, 2019 04:55 PM
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக 'டியர் காம்ரேட்' திரைப்படம் தமிழிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படங்களின் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை 'ரெமோ' பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். விவேக் மெர்வின் இந்த படத்துக்கு இசையமைக்கின்றனர்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடைபெற்ற Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் நிக்கி, அவரிடம் மூன்று பூக்களை கொடுத்து அதனை யாருக்கு டெடிக்கேட் செய்வீர்கள் என்று கேட்டார். அதற்கு பிரெண்ட்ஷிப் என்று ஒரு பூவை விஜய் தேவரகொண்டாவிற்கும், லவ் என்று ஒரு பூவை விஜய் சேதுபதிக்கும், மேரேஜ் என்று ஒரு பூவை தளபதி விஜய்க்கும் டெடிக்கேட் செய்வதகா தெரிவித்தார்.
'தளபதி விஜய், விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா' - ராஷ்மிகாவின் க்யூட்டான பதில் வீடியோ