Thalapathy 64 update: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஷூட்டிங்கில் ஒரு Change!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 24, 2019 08:57 PM
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்துக்காக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜூன், தாஸ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்காக ஷிமோகாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவு பெற்று தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.