'சத்திய சோதனை' - 'தளபதி 64' அப்டேட் கேட்ட ரசிகருக்கு பிரபல நடிகர் கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 26, 2019 12:20 PM
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் நடித்து வருகிறார். தற்போது கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழு சென்னை திரும்பினர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.
இந்நிலையில் தற்போது சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்தின் டைட்டில் லுக்கை பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்தார். அந்த பதிவிற்கு ரசிகர்கள் தளபதி 64 அப்டேட் கேட்டு தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக சத்திய சோதனை என கவுண்டமணி கூறும் GiF-ஐ கமெண்ட் செய்தார்.
https://t.co/Bew6NElLIN pic.twitter.com/PDYYbhYcnP
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) December 26, 2019