Shocking: பிரபல டிவி நடிகர் தூக்கிட்டு தற்கொலை
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 27, 2019 02:03 PM
பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் குஷல் பஞ்சாபி (Kushal Punjabi). இவர் 'இஸ்க் மெய்ன் மார்ஜவான்' என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகவுள்ளார். இந்நிலையில் இவர் இன்று (டிசம்பர் 27) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதனை ANI செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் அவர் தனது வீட்டில் தற்கொலைக் கடிதம் எழுதிவிட்டு மரணித்துள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. தற்போது அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அவரது நண்பர் கரண்வீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''உனது இத்தகைய மறைவை ஏற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. நீ வாழ்ந்து கொண்டிருந்த வாழ்வு எனக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைந்திருந்து
உனது நடன அனுபவங்கள், ஃபிட்னஸ், அப்பவாக உனது செயல் எல்லாவற்றுக்கும் மேலாக உனது சிரித்த முகமும் என அனைத்தும் உன்னதமானவை'' என்று குறிப்பிட்டுள்ளார்.