விஜய் சேதுபதியின் "96" படம் பார்த்த அழுதிருக்கிறேன் - பிரபல தெலுங்கு நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 29, 2019 04:27 PM
தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் கோனிடேலா புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், நயன்தாரா, தமன்னா, ஜெகபதிபாபு, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்துக்கு அமித் திரிவேதி இசையமைக்க ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய ராம்சரன் மற்றும் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி போல் ஒரு எளிமையான நடிகரை சமீபத்தில் பார்த்தது இல்லை என நெகிழ்ச்சியாக கூறினார்.
மேலும் ராம் சரண் பேசியபோது, நான் விஜய் சேதுபதியின் மிகப்பெரிய ரசிகன். 96 படம் பார்த்து அழுதிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். அவர் இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது சந்தோஷம்.
என கூறினார்.