"என்னோட 96 ராம் சாரும், பிகில் மைக்கேல் சாரும் சேர்ந்துட்டாங்க" - பிரபல நடிகை மகிழ்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 03, 2019 01:50 PM
‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.

‘மாநகரம்’,‘கைதி’ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று (அக்.3)ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தளபதி 64 படத்தின் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனிடையே, நடிகை வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராம் சார் மற்றும் மைக்கேல் சார். ரெண்டு Favourites-ம் சேந்திருக்காங்க..’ என கூறி ‘தளபதி 64’ படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘96’ திரைப்படத்தில் ராமச்சந்திரனிடம் ஃபோட்டோகிராபி பயிலும் மாணவியாக வர்ஷா நடித்திருந்தார். அதேபோல், தற்போது விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்திலும், மைக்கேலாக நடித்துள்ள விஜய்யிடம் ஃபுட்பால் பயிற்சி எடுக்கும் மாணவியாக நடித்திருக்கிறார்.
கதை சொல்வதில் மன்னர்களான விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதவிருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ram sir ❤️ Michael sir ❤️
Favourites together !! ❤️❤️#Thalapathy64Pooja @VijaySethuOffl @actorvijay 🥳🥳🥳 pic.twitter.com/MXXvZphK3q
— Varsha Bollamma (@VarshaBollamma) October 3, 2019