'7ஜி ரெயின்போ காலனி’ ரீமேக் பட பாடலின் லிரிக் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்கான ‘மலால்’ படத்தில் இடம்பெறும் காதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

A First song from 7G Rainbow Colony’s Hindi remake Malaal is out now

செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காகி வருகிறது. ஏற்கனவே, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஒடியா உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது. 

வித்தியாசமான காதல் கதையம்சத்தில் வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா - நா.முத்துக்குமார் கூட்டணியில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

டி சீரிஸ் நிறுவனத்துடன் இணைந்து பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார். ‘மலால்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை மங்கேஷ் ஹடவாலே இயக்குகிறார். இப்படத்தின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் ஜாவித் ஜாப்ரேவின் மகன் மீசன் ஜாப்ரே அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஷாம்ரீன் சேகல் நடிக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சஞ்சய் லீலா பன்சாலியே இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெறும் ‘அய்லா ரே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

'7ஜி ரெயின்போ காலனி’ ரீமேக் பட பாடலின் லிரிக் வீடியோ வீடியோ