www.garudabazaar.com

BREAKING: விஜய் நடிக்கும் BEAST படத்தின் ரிலீஸ் எப்போ? எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய BREAKING அப்டேட் கிடைத்துள்ளது.

Vijay Nelson Dhilip Kumar Beast Movie Release Date

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

அட்லி - விஜய் திடீர் சந்திப்பு... வைரலாகும் வேற லெவல் PHOTO! கூட யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

Vijay Nelson Dhilip Kumar Beast Movie Release Date

பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay Nelson Dhilip Kumar Beast Movie Release Date

முன்னதாக டீம் 100 நாட்கள் படப்பிடிப்பை முடித்ததாக பிரத்யேக BTS புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர் நெல்சன் தெரிவித்திருந்தார். நடிகர் விஜய், பூஜா ஹெக்டே தான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துள்ளனர். பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட்டின் பெரிய தயாரிப்பாளரான சஜித் நதியத்வாலா வாங்கி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தனது நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் என்ற பேனரின் கீழ் இந்தி சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளராக உள்ளார்.

சாய்னா நேவாலை ஆபாசமாக திட்டிய விவகாரம்: போலிசில் சித்தார்த் அளித்த வாக்குமூலம்! முழு தகவல்

Tags : Vijay, Beast

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Nelson Dhilip Kumar Beast Movie Release Date

People looking for online information on Beast, Vijay will find this news story useful.