777 Charlie Trailer

“எத்தன கார் இருந்தாலும்…” “தேர்தல் அப்போ சைக்கிள்ல…” விஜய் அம்மா சொன்ன குட்டி Story

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்துகொள்ளும் சிறப்பு தொடர் நிகழ்ச்சி பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.

Vijay mother shoba kutty Story about his son this week

ஒரு குட்டி ஸ்டோரி…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் விஜய் கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரின் தந்தை S.A. சந்திரசேகர் திரைப்பட இயக்குனராகவும், தாயார் ஷோபா பாடகியாவும் முத்திரைப் பதித்தவர்கள். இவர்கள் இருவருமே விஜய்யின் ஆரம்பகால திரைப்படப் பயணத்துக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தவர்கள். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார்.

Vijay mother shoba kutty Story about his son this week

அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். விஜய்யின் பாட்டுத் திறமைக்கு வித்திட்டவரும் ஷோபாவே.இந்நிலையில் ஷோபா சந்திரசேகர், தற்போது பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் தமது கர்நாடக சங்கீத பாடல்கள் சம்மந்தமாக ஒரு தொடர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

வாரம் ஒரு குட்டி ஸ்டோரி…

இந்த நிகழ்ச்சியில், தமது பாட்டுகள் மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சி “ஒரு குட்டி  ஸ்டோரி… ஒரு கர்நாட்டிக் பாட்டு’ என்கிற பெயரில் இன்றுமுதல் Behindwoods TV யூடியூப் சேனலில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. முதல்வார எபிசோட்டில் தனது மகள் வித்யாவின் நினைவுநாளை விஜய் என்றும் மறக்க மாட்டார் என்பது நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

Vijay mother shoba kutty Story about his son this week

சைக்கிள் விருப்பம்…

இந்த வார நிகழ்ச்சியில் விஜய்யின் சைக்கிள் விருப்பம் பற்றி பேசியுள்ளார். அதில் “சின்ன வயதிலேயே விஜய்க்கும் அவர் அப்பாவுக்கும் கார்கள் மீது ஆசை அதிகம். எந்த புதிய கார் வந்தாலும் விஜய் உடனே வாங்கித் தர சொல்லி, அவர் அப்பாவிடம் கேட்பார். அவரும் வாங்கித் தருவார். எத்தன கார் இருந்தாலும், விஜய் பள்ளிக்கு சைக்கிளில்தான் செல்வார். எலக்ஷன் அப்போ அவர் சைக்கிள்ல போனத நாங்களே டிவில பாத்துதான் தெரிஞ்சுகிட்டோம். எனக்கு ஒரே அதிர்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது” எனக் கூறியுள்ளார்.

Vijay mother shoba kutty Story about his son this week

Vijay mother shoba kutty Story about his son this week

People looking for online information on Kutty Story, Shoba chandrasekar, Vijay, Vijay cycle ride will find this news story useful.