பிரபல ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் ‘O2’… வெளியான சென்சார் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிப்பில் அடுத்த படமாக உருவாகி வருகிறது O2 திரைப்படம். நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

Nayanthara SR prabhu G S Vignesh O2 movie censor details

நயன்தாராவின் O2…

SR பிரபுவின் டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார்.  டிஸ்னி+  ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த  “O2”  திரைப்படத்தை,  ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிடவுள்ளது.

கதைக்களம்…

ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக பிரபல த்ரில்லர் படமான K13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் நடித்துள்ளார்.

Nayanthara SR prabhu G S Vignesh O2 movie censor details

கவனம் ஈர்த்த டீசர்…

இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. காற்று போக முடியாத பாதாளத்தில் சிக்கி தவிக்கும் பேருந்து பயணிகளுக்கு இடையே நடக்கும் மோதல்கள் டீசரில் பிரதானமாக அமைந்துள்ளன. அதுபோலவே வெளியான முதல் சிங்கிள் பாடலான “சுவாசமே சுவாசமே” பாடலும் கவனத்தை ஈர்த்தது.

Nayanthara SR prabhu G S Vignesh O2 movie censor details

சென்சார் தகவல்….

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஜுன் 17 ஆம் தேதி முதல் வெளியாக உள்ள இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்கள் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கவனம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara SR prabhu G S Vignesh O2 movie censor details

தொடர்புடைய இணைப்புகள்

Nayanthara SR prabhu G S Vignesh O2 movie censor details

People looking for online information on Nayanthara, O2, Rithwik, S R Prabhu will find this news story useful.