மாஸ்டர் ஆட்டம் ஆரம்பமாகிடுச்சு... பிரபல தியேட்டரை தெறிக்கவிடும் விஜய் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படத்தின் பேனர்கள் பிரபல சத்யம் தியேட்டரில் வைக்கப்பட்டுள்ளது.

Vijay Lokesh Kanagaraj's master banner placed in Satyam theatre

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். விஜய்யுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரீயா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சத்யம் தியேட்டரில் மாஸ்டர் படத்தின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகவும் பிரபலமாக இருக்கும் சத்யம் தியேட்டரில் வைக்கப்படும் பேனர்களுக்கு தனி மவுசு உண்டு. அங்கு மாஸ்டர் பட பேனர் இப்போது இடம்பெற்றிருப்பது விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் சம்மருக்கு ரிலீஸ் ஆவதாக படக்குழு அறிவித்துள்ளது.

Entertainment sub editor