விஜய்யுடன் அடுத்த லெவல் Work - முன்னாடி மிஸ் ஆகிடுச்சு - பார்த்திபனின் மாஸ்டர் சீக்ரட்ஸ் !
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜய்யுடன் இணைவது குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபனும் விஜய்யும் இணைந்தால் செமையாக இருக்கும் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட, அதற்கு பார்த்திபன் ரிப்ளை செய்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'மாஸ்க்கு மாஸ்டரை பிடிக்கும், மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும், 'நண்பன்' படத்தை என்னை இயக்க சொன்னார், அழகிய தமிழ்மகன் படத்துக்கு எழுத சொன்னார். நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்ப்பார்ப்பது நடக்கும்' என அவர் தெரிவித்துள்ளார்.
Massக்கு MASTER-ஐ பிடிக்கும்
Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.('நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்)
நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 18, 2020