www.garudabazaar.com
iTechUS

தமிழுக்கு வராங்களா ஶ்ரீ தேவி மகள் ஜான்வி ?.. தந்தை போனிகபூர் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரை உலகில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஜான்வி கபூர்.

Boney Kapoor Clarification Tweet about Janhvi Kapoor Kollywood Debut

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இளைப்பாறுங்கள் அப்பா".. பரியேறும் பெருமாள் தங்கராஜ் மறைவுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்..

பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'தடக்' என்னும் திரைப்படத்தின் மூலம், நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சில படங்கள் நடித்து வந்த ஜான்வி கபூர், சமீபத்தில் சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வாவுடன் இணைந்து மிலி என்ற சர்வைவல் த்ரில்லர் திரைப்படத்தில் காணப்பட்டார். இப்படத்தை மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்தார்.  இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Boney Kapoor Clarification Tweet about Janhvi Kapoor Kollywood Debut

Images are subject to © copyright to their respective owners.

இதற்கு முன் வெளியான குட்லக் ஜெர்ரி படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஜான்வி கபூர், தனது அடுத்த திரைப்படமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹியில் ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி  படத்தில் ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார்.

Boney Kapoor Clarification Tweet about Janhvi Kapoor Kollywood Debut

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் இப்படத்திற்காக தினேஷ் கார்த்திக்கிடம் ஜான்வி கபூர் கிரிக்கெட் பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, அவர் வருண் தவானுடன் இணைந்து பவால் என்ற  படத்திலும் நடித்துள்ளார். நிதேஷ் திவாரி இயக்கிய இப்படம் ஏப்ரல் 7, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Boney Kapoor Clarification Tweet about Janhvi Kapoor Kollywood Debut

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "அன்பார்ந்த ஊடக நண்பர்களே, ஜான்வி கபூர் தற்போது வரை எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்." என போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.

Also Read | இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்.. வெளிநாட்டிற்கு செல்லும் ஷங்கர் & கமல்ஹாசன்? BREAKING அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Boney Kapoor Clarification Tweet about Janhvi Kapoor Kollywood Debut

People looking for online information on Boney kapoor, Janhvi Kapoor will find this news story useful.