#BREAKING : விஜய்யின் மாஸ்டர் - பக்கா ஃபினிஷிங் கொடுத்த தளபதி.! ஆடியோ லான்ச்சுக்கு முன் ஒரு செம Update.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை பற்றிய மிக முக்கியமான தகவல் தெரியவந்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் டப்பிங் பணிகள் | vijay in master dubbing ft lokesh kanagaraj, vijay sethupathy and anirudh

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்து, இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மாஸ்டர் டப்பிங் குறித்து முக்கியமான தகவல் தெரிய வந்துள்ளது. மாஸ்டர் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் நேற்றோடு நிறைவு செய்ததாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள க்னாக் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்த மாஸ்டர் டப்பிங் வேலைகளில், விஜய் தனது டப்பிங்கை நேற்று நிறைவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9 அன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Entertainment sub editor