மாஸ்டர் குட்டி ஸ்டோரியை விஜய் பாடி கேட்டிருப்பீங்க.. இந்த குட்டீஸ் பாடி கேட்டிருக்கீங்களா.?!!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய்யின் மாஸ்டர் படத்தில் வெளியான குட்டி ஸ்டோரி பாடலை இரண்டு சிறுவர்கள் பாடும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தில் இருந்து அண்மையில் குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ஹிட் அடித்தது.
இந்நிலையில் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து குட்டி ஸ்டோரி பாடலை பாடியிருப்பது, சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது. கேரளாவை சேர்ந்த துருவன், ஸ்கந்தா என்ற இரண்டு குட்டீஸ்களும் சேர்ந்து, மழலை குரலில் பாடும் வீடியோவை குட்டி ஸ்டோரி லிரிக் ரைட்டர் அருண்ராஜா காமராஜ் பகிர்ந்துள்ளார். குட்டி ஸ்டோரி பாடல் வெளிநாடுகள் வரை ரீச் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
kutties version of kutti story :) spreading positivity from kerala 😇 dhruvan & skanda and the team behind this token of love.. hearty wishes and happiness to see this effort 😍
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) March 5, 2020