தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 63' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் டேனியல் பாலாஜி, யோகி பாபு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துவருகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது.
அதனைத் தொடர்ந்து 'மாநகரம்', 'கைதி' படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் 'மெர்சல்' படத்தில் தளபதி விஜய்யின் பையனாக நடித்த அக்ஷத், விஜய்யை தளபதி 63 ஸ்பாட்டில் சந்தித்து தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து பெற்றிருக்கிறார். அப்போது சிறுவனுக்கு விஜய் சிறிய கேமரா ஒன்றை பரிசளித்துள்ளார்.