வேர்ல்டு கப் போட்டியை மகன் உட்பட குடும்பத்துடன் நேரில் காணும் இந்த சூப்பர் ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2019  ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (09.06.2019) இந்தியா - ஆஸ்திரேலேயா அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன.

Mahesh Babu Watching World cup match with his family

முதலில் பேட் செய் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 352 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 117 ரன்களும், வீராட் கோலி 82 ரன்களும் எடுத்தனர்.

இந்த போட்டியை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் நேரில் கண்டுகளித்துவருகிறார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகேஷ் பாபு தனது 'மஹார்ஷி' படத்தின் வெற்றியை லண்டனில் கொண்டாடுவதாக தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துவருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது வேர்ல்டு கப் போட்டியில் கண்டுகளிப்பது குறிப்பிடத்தக்கது.