விஜய் ரசிகர்கள் எப்போதுமே செம ஸ்பீடுப்பா.. வேற லெவல்ல ட்ரெண்டிங்கை தெறிக்கவிடுறாங்களே.!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் நிதியுதவி அளித்ததையடுத்து அவரது ரசிகர்கள், அதுகுறித்து ட்ரெண்ட் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா வைரஸை எதிர்த்து போரிட, பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவை சேர்ந்த விஜய்காந்த், லாரன்ஸ், அஜித் உள்ளிட்டோரும் நிதியுதவி அளித்துள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய் அவரது பங்களிப்பாக 1.30 கோடிகளை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இதற்கு சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் பாராட்டு தெரிவித்து கொண்டிருக்க, விஜய் ரசிகர்கள் இன்னொரு பக்கம் #RealHeroThapathyVIJAY என்று ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். விஜய் நிதியுதவி அளித்த செய்தி வந்த 1 மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் ட்வீட்களை கடந்து இந்த ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதியளித்த விஜய்யை பாராட்டி அவரது ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
ரசிகர்கள் சொல்வது போலவே மக்களுக்கொரு பிரச்சனை என்று வருகிற பொழுது, தவறாமல் கைகொடுக்கும் விஜய், ஒரு ரியல் ஹீரோதான் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார்.
This is How IDOL will Lead us.❤️😍
Donated 1.30Crs for Corona Relief Fund to Various Fields..🔥#RealHeroThalapathyVIJAY pic.twitter.com/F19mnRGdN0
— Online Vijay FC™ (@OnlineVijayFC) April 22, 2020