மேயாத மான் கூட்டணியில் இன்னொரு படம்.! செம ஸ்டேட்மென்ட் கொடுத்த ஹீரோ.. டைரக்டர் என்ன சொல்றாரு.?!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் வைபவ் மேயாத மான் இயக்குநர் ரத்னகுமாருடன் மீண்டும் இணைவது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2017-ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மேயாத மான். வைபவ், ப்ரியா பவானி ஷங்கர், இந்துஜா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து ரத்ன குமார் ஆடை படத்தை இயக்கினார். மேலும் விஜய்யின் மாஸ்டர் படத்தின் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடிகர் வைபவ்வின் பிறந்தநாளுக்கு ரத்னகுமார் வாழ்த்து தெரிவித்தார். ''சரியாக இதே நாளில், 2017-ஆம் ஆண்டு ஷூட்டிங்கை தொடங்கினோம். அப்போது எங்கள் குழுவில் இருந்து ஒரே சீனியர் நீங்கள் தான், எங்களை நம்பியதற்கு நன்றி'' என வாழ்த்து பதிவிட்டார். இதற்கு பதிலளித்த வைபவ், ''Love You.. ரத்னா, அடுத்த வருடம் இதே நாளில் நாம் இன்னொரு படத்தை தொடங்குவோம்' என பதிவிட்டுள்ளார்.
Ratna ..... I love u ..... next year same date v shall start a film again 😊😊😍 https://t.co/Y5JSJEZHgr
— Vaibhav (@actor_vaibhav) April 21, 2020