விஜய் ரசிகர்கள் வெறித்தனம்... கேரளாவில் 'MASTER'CLASS நலத்திட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொல்லம் நண்பன்ஸ் என இயங்கி வரும் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vijay fans kollam nanbans welfare activities in kerala0

கேரளாவை சேர்ந்த விஜய் வெறியர்களால் நடத்தப்படுவது கொல்லம் நண்பன்ஸ் இயக்கம். கேரளாவில் வெளியாகும் விஜய் படங்களை இவர்கள் திருவிழா போல கொண்டாடி வந்தனர். அண்மையில் விஜய் நடித்த 'சுறா' படத்தை ரீ ரிலீஸ் செய்து இணையத்தை கலக்கியது கொல்லம் நண்பன்ஸ் டீம்.

இந்த நிலையில் கேரளாவில் அவர்கள் செய்த நலத்திட்ட உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்த இருவரின் திருமணத்தை இவர்களே எடுத்து நடத்தியிருக்கிறார்கள். கொல்லம் செயின்ட் ஆண்டனி சர்ச்சில் நடைபெற்ற பிஜு மற்றும் ரென்ஜினாவின் திருமணத்துக்கான செலவை இவர்களே ஏற்று, கல்யாணத்தையும் முன் நின்று நடத்தி கொடுத்து இரு உள்ளங்களின் கனவை நினைவாக்கியுள்ளனர். மேலும் கொல்லம் பள்ளித்தோட்டம் பகுதியை சேர்ந்த லதா என்பவர், தன் வீட்டை சரி செய்ய முடியாமல் தவித்திருக்க, அதையும் சரி செய்து கொடுக்க கொல்லம் நண்பன்ஸ் குழு முன்வந்துள்ளது.

Entertainment sub editor