''நான் திரும்ப வரேன்'' - பஞ்ச் பேசி மாஸ் காட்டிய விஜயகாந்த் - ரசிகர்கள் ஆரவாரம்
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவில் ஆக்ரோஷமான பஞ்ச் வசனங்கள், மேனரிசங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். மேலும்,தமிழ் சினிமாவில் அனைவராலும் நேசிக்கப்படக் கூடிய நடிகர்களில் ஒருவர் . மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத அவரது வெளிப்படையான குணம் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தேமுதிக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வென்ற கட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், நான் மீண்டும் வருவேன், சீக்கிரம் வருவேன், வந்து மக்களுக்கு நல்லது செய்வேன். எல்லோரும் சாப்பிட்டு தான் போகணும் இதனை கேட்டு தொண்டர்கள் ஆரவாரம் செய்ததில் அரங்கமே அதிர்ந்தது.
''நான் திரும்ப வரேன்'' - பஞ்ச் பேசி மாஸ் காட்டிய விஜயகாந்த் - ரசிகர்கள் ஆரவாரம் வீடியோ
Tags : Vijayakanth, DMDK