www.garudabazaar.com

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியான பிரபல தமிழ்நாட்டு நடிகை..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தில் பிரபல தமிழக நடிகை ஜோடி சேர உள்ளார்.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Update

Also Read | ஆஹா.. அரவிந்த் சாமி நடிக்கும் புதிய ஹெய்ஸ்ட் திரில்லர் படம்.. எப்போ ரிலீஸ்? முழு தகவல்

தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Update

குத்து சண்டை வீரர் மைக் டைசன், LIGER படத்தில் நடித்துள்ளார். Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’  எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Update

இந்த படம் வரும் 2022 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதே ஆகஸ்ட் 25 ஆம் நாளில் தான் விஜய் தேவரகொண்டா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Update

இந்த லைகர் படத்தை அடுத்து அடுத்த திரைப்படமான “JGM”  படத்தில் விஜய் தேவரகொண்டா - பூரி ஜெகன்நாத் இணைய உள்ளனர். JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2022  துவங்கி, உலகின் பல இடங்களில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம்,  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 3 ஆகஸ்ட் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Update

இச்சூழலில் விஜய் தேவரகொண்டா தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் குடும்ப பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படத்தை ஷிவ நிர்வானா இயக்க, முரளி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் காலா, கபாலி, மெட்ராஸ் படங்களின் ஒளிப்பதிவாளர் ஆவார். ஹேஷம் அப்துல் வாஹப் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார்.

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Update

சென்னை பல்லாவரத்தை சார்ந்த நடிகை சமந்தா, தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியான பிரபல தமிழ்நாட்டு நடிகை..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda Samantha Ruth Prabhu VD 11 Movie Update

People looking for online information on Samantha, Samantha Ruth Prabhu, VD 11 Movie, VD 11 Movie Update, Vijay Devarakonda will find this news story useful.