www.garudabazaar.com

கட்டிப்பிடிச்சு சிரிக்க வச்ச நயன்தாரா… அவங்க நடிப்ப பத்தி சமந்தா சொன்ன கமெண்ட் – வைரல் story

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக பதிலளித்தார்.

Actress Samantha comment on nayanthara acting instagram story

Also Read | “எனக்குள்ள இருக்குற குழந்த ஆட்டம் போடுது”…. fangirl ஆன ’நானே வருவேன்’ நடிகை – viral pic

வெற்றிப்படங்கள்…

சென்னைப் பெண்ணான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  அதையடுத்து அவர் இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். தற்போது திரைப்படங்களில் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார்.

Actress Samantha comment on nayanthara acting instagram story

தற்போதைய படங்கள்…

தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம், ‘'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் வெளியான ’புஷ்பா தி ரைஸ்’ படத்தின் ’ஒ அண்ட்டா வா மாவா’ பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.

Actress Samantha comment on nayanthara acting instagram story

நயன்தாரா நடிப்பைப் பற்றி….

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரோடு சமந்தா நடித்துள்ளார். இந்த படம் வரும்  ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து தற்போது சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் நயன்தாரா பற்றி கேட்ட ரசிகருக்கு பதிலளிக்கையில் “ அவர் ஒரு அற்புதமான நடிகர். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவரின் நடிப்பை உங்களிடம் காட்ட நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இதுவரையிலான அவரின் பெஸ்ட் இதுவாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார். மேலும் இதோடு நயன்தாரா அவரை இருக்கமாகக் கட்டியணைத்திருக்கும் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். முன்னணி நடிகைகளாக இருக்கும் இருவரும் இந்த படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்து நெருக்கமான தோழிகளாக இருந்து வருகின்றனர்.

Also Read | பிரபுதேவாவுடன் மீண்டும் Sing in the rain…தெறிக்க விட்ட வடிவேலுவின் பாட்டு… வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Samantha comment on nayanthara acting instagram story

People looking for online information on KVRK movie, Nayanthara, Samantha, Samantha comment on nayanthara, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.