www.garudabazaar.com

கர்ப்பமான வயிறுடன் நடிகை சோனம் கபூர் நடத்திய பேஷன் போட்டோஷூட்... நடிகை சமந்தா அடித்த கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை சோனம் கபூர் கர்ப்பமான வயிறுடன் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதற்கு நடிகை சமந்தாவின் கமெண்டும் வைரலாகி வருகிறது.

Samantha comment on Sonam Kapoor latest photoshoot with baby bump

Also Read | விக்ரம் நடிக்கும் "கோப்ரா" படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய பிரபல டிவி சேனல் நிறுவனம்

தயாரிப்பாளர் போனிகபூரின் தம்பியும் பிரபல நடிகரான அனில் கபூரின்  மகள் நடிகை சோனம் கபூர். 2007-ம் ஆண்டு பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அறிமுக நடிகர்கள் ரன்பீர் கபூர், சோனம் கபூர் நடித்து வெளியான படம் 'சாவரியா'. தஸ்தயேவ்ஸ்கி எழுதிய வெண்ணிற இரவுகள் குறுநாவலை மையமாக வைத்து இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Samantha comment on Sonam Kapoor latest photoshoot with baby bump

பின் கடந்த 2013ம் ஆண்டு இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘ராஞ்சனா - அம்பிகாபதி’ படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர், சோனம் கபூர். கடந்த 2018-ல்  நீண்டகாலமாக நண்பரான தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துக் கொண்டனர். மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் நண்பர்கள், உறவினர்கள் ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

Samantha comment on Sonam Kapoor latest photoshoot with baby bump

சோனம் கபூர் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களையும், கணவருடன் சுற்றுலா செல்லும் புகைப்படங்களையும், பேஷன் புகைப்படங்களையும் பதிவேற்றுவார். சில நாட்களுக்கு முன் கர்ப்பம் குறித்த செய்தியை வெளியிட்ட சோனம் கபூர், சோனம் மற்றும் ஆனந்த் அஹுஜா தங்களின் முதல் குழந்தை உருவான செய்தியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.

Samantha comment on Sonam Kapoor latest photoshoot with baby bump

இந்நிலையில் நடிகை சோனம் கபூர், கர்ப்பமான வயிற்றுடன் 5 ஆம் முறையாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். ரியா கபூருடன் இணைந்து இந்த போட்டோஷூட்டை சோனம் நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு Sigh❤  என நடிகை சமந்தாவும் கமெண்ட் செய்துள்ளார்.

Samantha comment on Sonam Kapoor latest photoshoot with baby bump

Also Read | நிறை மாத கர்ப்பத்திலும் செம்ம டான்ஸ் ஆடிய நடிகை ஸ்ரேயா.. வைரலாகும் OLD THROWBACK வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha comment on Sonam Kapoor latest photoshoot with baby bump

People looking for online information on Samantha, Sonam Kapoor, Sonam Kapoor latest baby bump photoshoots, Sonam Kapoor latest photoshoot will find this news story useful.