www.garudabazaar.com

OFFICIAL: "K.G.F" தயாரிப்பாளர்- சுதா கொங்கரா இணையும் மிரட்டலான படம்! பெரிய சம்பவம் இருக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்களூர்: சுதா கொங்கரா - KGF தயாரிப்பாளர்கள் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Sudha Kongara Joining with KGF Movie Producer for New Film

Also Read | KGF CHAPTER 2 ஷூட்டிங்ல ஜாலியா சேட்டை செஞ்சுருக்காங்க.. நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பகிந்த செமயான BTS போட்டோ!

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

Sudha Kongara Joining with KGF Movie Producer for New Film

இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.

தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது. இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்துள்ளது.

Sudha Kongara Joining with KGF Movie Producer for New Film

ஹோம்பாலே பிலிம்ஸ் ஏற்கனவே கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தை தயாரித்தது. தற்போது பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தை அறிவித்துள்ளது.

Sudha Kongara Joining with KGF Movie Producer for New Film

அந்த அறிவிப்பில், "சில உண்மைக் கதைகள் சொல்லப்படுவதற்கும், சரியாகச் சொல்லுவதற்கும் தகுதியானவை. நாங்கள், ஹோம்பலே பிலிம்ஸ் இயக்குனர் சுதா கொங்கராவுடன் எங்கள் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

எங்கள் எல்லாப் படங்களிலும் இருப்பதைப் போலவே இந்தியாவின் கற்பனையை நாம் கைப்பற்றும் ஒரு கதை இது" என அறிவித்துள்ளனர்.

Sudha Kongara Joining with KGF Movie Producer for New Film

விரைவில் இப்படத்தின் ஹீரோ உள்ளிட்ட மற்ற அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://www.behindwoods.com/bgm8/

 

OFFICIAL: "K.G.F" தயாரிப்பாளர்- சுதா கொங்கரா இணையும் மிரட்டலான படம்! பெரிய சம்பவம் இருக்கு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sudha Kongara Joining with KGF Movie Producer for New Film

People looking for online information on KGF Chapter 2 Movie, KGF Movie Producer, KGF2, Prashanth Neel, Sudha Kongara, Yash will find this news story useful.