www.garudabazaar.com

ராஷ்மிகா மந்தனாவுடன் திருமணமா? வைரலாகும் விஜய் தேவரகொண்டாவின் சமீபத்திய அறிக்கை !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் செய்ய உள்ளதாக வந்த செய்திக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ரியாக்ட் செய்துள்ளார்.

Vijay Devarakonda React against Wedding Rumours with Rashmika Mandanna

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் தமிழக உரிமத்தை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா டோலிவுட்டின் மிக அழகான ஹிட் ஜோடி ஆகும் . இருவருக்குமான கெமிஸ்ட்ரி திரையில் நன்றாக பிரதிபலிக்கும். டியர் காம்ரேட், கீதா கேவிந்தம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இன்னொரு பக்கம் இருவருக்குள்ளும் காதல் என்று வதந்திகள் காலங்காலமாக உலா வருகின்றன. இருவரும் சமீபத்தில் மும்பையில் இருக்கும் போட்டோக்கள் வெளியாகின.

இது அவர்களுக்கு எதிராக வரும் செய்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் வதந்தி பரவி வந்தது. இந்தி ஊடகங்களும் குறித்து செய்தி வெளியிட்டன. இந்நிலையில், இந்த திருமண செய்திகள் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா ட்விட்டர் மூலம் அறிவிப்பு டிவீட் செய்து பதில் அளித்துள்ளார். அதில்,  'நான்சென்ஸ்' என்று குறிப்பிட்டு "இது வழக்கம் போல் முட்டாள் செய்தி" என டிவீட் செய்துள்ளார்.

Vijay Devarakonda React against Wedding Rumours with Rashmika Mandanna

தற்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

குத்து சண்டை வீரர் மைக் டைசன், LIGER படத்தில் நடித்துள்ளார். Mixed Martial Arts நிபுணர் பற்றிய இந்த கதையில், ‘Iron Mike’  எனும் முக்கியமான கதாபாத்திரத்தில், அவர் நடிக்கிறார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

Vijay Devarakonda React against Wedding Rumours with Rashmika Mandanna

இப்படத்தினை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் சார்பில்  பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து மிகப்பெரும் பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான படைப்பாக இப்படத்தினை உருவாக்குகின்றனர். மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Vijay Devarakonda React against Wedding Rumours with Rashmika Mandanna

இந்த படம் வரும் 2022 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதே ஆகஸ்ட் 25 ஆம் நாளில் தான் விஜய் தேவரகொண்டா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

BIGGBOSS: நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக இப்போ பிக்பாஸ் அல்டிமேட்டை நடத்த போறது இவரா?

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Devarakonda React against Wedding Rumours with Rashmika Mandanna

People looking for online information on கீதா கேவிந்தம், டியர் காம்ரேட், திருமணம், ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா, Rashmika Mandanna, Vijay Devarakonda, Wedding Rumours will find this news story useful.