www.garudabazaar.com

ராஷ்மிகா மந்தனாவா இது? ஆளே அடையாளம் தெரியல! வெளியான புஷ்பா படத்தின் புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ் (Pushpa - The Rise)'.

Actress Rashmika Mandanna looks unrecognizable from pushpa

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் இந்திய அளவில் பேசப்பட்ட தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருகிறது.

Actress Rashmika Mandanna looks unrecognizable from pushpa

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Actress Rashmika Mandanna looks unrecognizable from pushpa

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள், முதல் சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வர்வேற்பை பெற்றன, இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் போஸ்டர் இன்று (29.09.2021) வெளியாகி உள்ளது. மலை கிராமத்து பெண்ணாக புதிய அவதாரத்தில் ராஷ்மிகா தோற்றம் உள்ளது.

Actress Rashmika Mandanna looks unrecognizable from pushpa

ஸ்ரீ வள்ளி எனும் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Rashmika Mandanna looks unrecognizable from pushpa

People looking for online information on Pushpa, Rashmika Mandanna will find this news story useful.