www.garudabazaar.com

மன்னிச்சிடுங்க சாமி.. புஷ்பா பட தமிழ் ரசிகர்களுக்கு ரஷ்மிகா கொடுத்த வாக்குறுதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் ரசிகர்களிடையே புஷ்பா திரைப்பட நாயகி ராஷ்மிகா மந்தன்னா மன்னிப்பு கேட்டுள்ளார்.

Rashmika Mandanna says sorry to chennai and tamil fans of pushpa

நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் புஷ்பா: தி ரைஸ்.

முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர், புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்‌ஷன்களை அள்ளியது.

Rashmika Mandanna says sorry to chennai and tamil fans of pushpa

இந்த படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தன்னா, கன்னட படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார். பின்னர் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பிலான கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் மூலம் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

முன்னதாக தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். குறிப்பாக புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடலில் ராஷ்மிகா ஆடியிருக்கும் குறிப்பிட்ட ஸ்டெப் இன்டர்நெட்டில் ட்ரெண்டாகி இருக்கின்றது. இதனை அடுத்து அவரும் பல இடத்தில் இந்த பாடலுக்கு மகிழ்ச்சியாக குத்தாட்டம் போட்ட வீடியோக்களும் இணையத்தில் வலம் வந்தன.

Rashmika Mandanna says sorry to chennai and tamil fans of pushpa

இதனிடையே புஷ்பா படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது நடிகை ரஷ்மிகா மந்தன்னா தமிழ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவினை பகிர்ந்திருக்கிறார். அதில், “அன்பு சென்னை மக்களே! புஷ்பா திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு என்னால் சென்னைக்கு வருகை தந்து கலந்து கொள்ள முடியவில்லை.

Rashmika Mandanna says sorry to chennai and tamil fans of pushpa

இதற்காக நான் வருந்தினேன். பரவாயில்லை கவலை வேண்டாம். மிக விரைவில் நிஜமாகவே உங்கள் அனைவரையும் வந்து சந்திக்க திட்டமிட்டு இருக்கிறேன். கண்டிப்பாக நான் உங்களை வந்து சந்திக்கிறேன்.. ஓகே? அதிக அன்புடன் ராஷ்மிகா மந்தன்னா!” என தெரிவித்துள்ளார்.

Rashmika Mandanna says sorry to chennai and tamil fans of pushpa

People looking for online information on Allu Arjun, Pushpa The Rise, Rashmika Mandanna will find this news story useful.