www.garudabazaar.com

மணிகண்டனை கட்டித்தழுவி முத்தமிட்ட மிஷ்கின்.. "உன் பயணம் தொடரட்டும்".. வைரல் புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசி விவசாயி பட இயக்குநர் மணிகண்டனை  சந்தித்த இயக்குனர் மிஷ்கின் அவருக்கு மாலை அணிவித்து, கட்டித்தழுவி, முத்தமிட்டு தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

Mysskin hugs and kisses the last farmer film director

காக்கா முட்டை, மணிகண்டன் இயக்கி, தயாரித்துள்ள படம் கடைசி விவசாயி. இப்படத்தில் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். இப்படம் பிப்ரவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.

இப்படத்தில்  80 வயது முதியவரான நல்லாண்டி தான் இப்படத்தின் நாயகன். இவர் மாயாண்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்த இருக்கிறார். மிக யதார்த்த நடிப்பால் எல்லோரையும் கண் கலங்க வைத்துள்ளார். இத்திரைப்படத்தை பார்த்தை பலர் இயக்குநரையும் , நல்லாண்டியையும் பாராட்டி புகழ்ந்து வருகின்றனர். அண்மையில்,  கடைசி விவசாயி திரைப்படத்தை பார்த்த இயக்குனர் மிஷ்கின் அப்படம் குறித்து பெருமையுடன் பல்வேறு விஷயங்களை வீடியோ வாயிலாக பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் மணிகண்டனை  உசிலம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த இயக்குனர் மிஷ்கின் அவருக்கு மாலை அணிவித்து, கட்டித்தழுவி, முத்தமிட்டு தனது வாழ்த்துகளை கூறினார். பின்பு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த நல்லாண்டியின் வீட்டிற்குச் சென்று அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்தார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் இயக்குநர் மிஷ்கின் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

அதில், "கடைசி விவசாயி தந்த மகா கலைஞனான மணிகண்டனை அவன் ஊரான உசிலம்பட்டிக்குச் சென்று சந்தித்தேன். ஆரத் தழுவினேன். மிகச் சிறந்த படைப்பைத் தமிழுக்குத் தந்த அவனுக்கு நன்றி கூறி, அவன் கரங்களை முத்தமிட்டேன். படத்தின் கதையின் நாயகனாக, ஒட்டுமொத்த இந்தியாவின் எல்லா விவசாயிகளின் அடையாளமாக வாழ்ந்த பெரியவரின் வீட்டுக்குச் சென்று அவர் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினேன். மணிகண்டன் படப்பிடிப்பு செய்த இடத்திற்குச் சென்று மதிய உணவு உண்டோம். இந்த முழு நாளும் ஒரு அற்புத நாளாக மாறியது. மணிகண்டா, உன் பயணம் தொடரட்டும். உன்னை இயற்கை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Mysskin hugs and kisses the last farmer film director

People looking for online information on Kadasi vivasayi, Kollywood, Manikandan, Mysskin, Nallandi, Theni, Vijay Sethupathy will find this news story useful.