‘வள்ளி திருமணம்’ ஹீரோ.. மாஸ் Intro! திருமணத்துக்கு போடும் கண்டிஷன்! ஆனா நடந்தது இதான்! வெளியான Promo!
முகப்பு > சினிமா செய்திகள்வள்ளி திருமணம் – புதிய தொடரின் அட்டகாசமான அடுத்த ப்ரோமோவை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
Colors Tamil Tv, சென்னை, டிச.9:- தமிழகத்தில் பல்வேறு எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வரும் புத்தாண்டு முதல் புத்தம் புதிய தொடரான வள்ளி திருமணம் என்னும் தொடரை ஒளிபரப்ப உள்ளது.
இதன் 2வது ப்ரோமோவை ஏற்கனவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
வள்ளி அறிமுகம்:
அந்த ப்ரோமோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த சீரியாலின் புதிய ப்ரோமோவில், இந்த சிரியலின் நாயகன் அறிமுகம் ஆகியிருக்கிறார். குறிப்பாக இந்த ப்ரோமோவில், இந்த சீரியலின் கதை என்ன என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய ப்ரோமோவில் வள்ளியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும் வகையிலும், வள்ளியின் தாயாக நடிகை நளினியையும், வள்ளியின் நண்பராக நாஞ்சில் விஜயனையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
Also Read: போடு! நம்ம BiggBoss கேபியா இது? பிரபல விஜய் டிவி சீரியலில் மாஸ் எண்ட்ரி! அசத்தலான promo!
நாயகன் அறிமுகமாகும் புதிய ப்ரோமோ:
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள இந்த புதிய ப்ரோமோவி, வெளிநாட்டில் இருந்து வரும் பணக்கார நாயகன் தன் வீட்டுக்கு வர, அப்பா அம்மா இல்லாத அவனை வளர்த்து வரும் அவனது அக்கா, மாமா அவனுக்கு நல்லபடியாய் திருமணம் செய்துவைக்கும் நோக்கி, அவனிடம் எந்த மாதிரி மணப்பெண் வேண்டும் என கேட்கிறார்கள்.
ஆனால் நாயகனோ, என்னதான், தான் வெளிநாட்டில் இருந்து வந்தாலும் தனக்கு அடக்கமான மற்றும் மங்களகரமான சாத்வீக குணமுள்ள பெண் வேண்டும் என்கிறான்.
அப்படி ஒரு பெண்ணை அவனும் அவனது மாமாவும் சேர்ந்து தேட, கோயிலில் பூசாரியின் கைகளை பிடித்து மரியாதையுடன் பேசிக்கொண்டிருக்கும் வள்ளியை (நட்சத்திரா) ஹீரோவுக்கு பிடித்துவிடுகிறது.
சாத்வீகமான பெண்:
ஆனால் வள்ளியோ, பூசாரி செய்த ஒரு தவறுக்காக அவரை மிரட்டி நல்புத்தி சொல்லிக் கொண்டிருக்கிறாள். அச்சமற்ற மற்றும் உயர்ந்த மனப்பான்மையைக் கொண்டவள் வள்ளி.
தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஊரே மதிக்கக் கூடிய, அல்லது ஊரே பார்த்து பயப்படக் கூடிய இடத்தில் இருப்பவர்களாக இருந்தாலும், அவர்களை சைலண்ட்டாக தட்டிக் கேட்கும் தைரியசாலியாகவும், நல்லவர்களிடத்தில் அன்பான இதயம் கொண்டவளாகவும் இருக்கிறாள்.
வள்ளி திருமணம் எப்போது?
இந்நிலையில் இந்த ப்ரோமோவில் நாயகன் மற்றும் நாயகியின் எதிரெதிர் குணாதிசயங்கள் காட்டப்பட்டுள்ளன. இதையெல்லாம் மீறி, இவர்கள் இருவரும் எப்படி திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள்.
வள்ளி திருமணம் எப்படி அரங்கேறப் போகிறது என்பதை நோக்கி கதை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. வள்ளி திருமணம் சீரியல், வரும் ஜனவரி மாதம் 3-ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.