நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்துள்ள ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது.

த்ரில்லர்-ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரிக்கிறார். ஆண்ட்ரூவ் லூயிஸ் இயக்கும் இப்படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
விசாரணை அதிகாரி வேடத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சீரியல் கொலைக்கும் அஞ்சாத கெத்தான கொலைகாரன் வேடத்தில் விஜய் ஆண்டனியும் இணைந்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
நடிகர்கள் நாசர், சீதா, பகவதி பெருமாள், கவுதம், சதீஷ், சம்பத் ராம், ஆஷிம நர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆக்ஷன் கிங்குடன் விஜய் ஆண்டனி மிரட்டும் ‘கொலைகாரன்’ டிரைலர் வீடியோ