அடேங்கப்பா வேற லெவல்... சூரரைப் போற்று புதிய பாடல் செய்த 'மெகா' சாதனை...!!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி முடித்திருக்கும் படம் 'சூரரைப் போற்று'. படத்தின் வேலைகள் முடிந்த நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்துக்கு எக்கசக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் வெளியான இந்த படத்தின் முதல் சிங்கள் 'வெய்யோன் சில்லி' மக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக 'மாஸ்டர்' படத்தின் 'குட்டி ஸ்டோரி' பாடல் வெளியான முன்தினம் இந்தப் பாடல் வெளியானது.

இந்நிலையில் நேற்று (9.3.2020) இப்படத்தின் இரண்டாம் சிங்கிளான 'மண்ணுருண்ட' பாடல் வெளியானது. வெளியான கொஞ்ச நேரத்திலேயே பாடல் வைரல் ஆனது. அதுவும் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த பாடல் 1 மில்லியன் பார்வைகளை அள்ளி இருக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் மட்டுமே 10 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் முந்தைய பாடலைப் போலவே இன்று மாஸ்டர் படத்தின் இரண்டாம் சிங்கிள் 'வாத்தி' வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.