நயன்தாராவின் ஃபோட்டோ பகிர்ந்து விக்னேஷ் சிவன் கேள்வி - ''இப்படி பண்ணா கொரோனா செத்துடுமா ?''
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதித்தோரையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தோரையும் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா வைரஸிற்கு எதிராக நமது ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக நேற்று ( ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வரை மின் விளக்குகளை அணைத்து விட்டு , விளக்கு, டார்ச் லைட் உள்ளிட்டவற்றின் மூலம் ஒளி எழுப்புமாறு கேட்டுக்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக பிரபலங்கள் பலரும் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி அதனை தனது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது கையால் விளக்கை ஏந்தியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ் சிவன், ''அறிவியல் ரீதியாக பேசும்போது, அதிகப்படியான நெருப்பும் , ஒளியும் வெப்பநிலையை அதிகப்படுத்தி சில கொரோனா வைரஸை கொன்று விடலாம் எனக்கூறப்படுவது உண்மையா ?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.