ஏப்ரல் 9-ம் தேதி, 'மாஸ்டர்' படம் ரிலீஸ்?... பிரபல திரையரங்கம் போட்ட பதிவு... குஷியான ரசிகர்கள்...!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் அப்படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே ஒன்றிணைந்து இருக்கிறது. படத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங் என்ற நிலைமை இருந்தது.

மேலும் மாஸ்டர் படம் இந்த மாதம் 9- ம் நீதி அன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா நோய் காரணமாக தமிழகத்தில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாஸ்டர் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல திரையரங்கம் ஒன்று, வான வேடிக்கை புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி, 4 மணிக்கு ரிலீஸ் ஆகி இருந்தால் இப்படி தான் திருவிழா கோலமாக இருந்திருக்கும் என்று பதிவு இட்டுள்ளனர். இதனைப் பார்த்த தளபதி ரசிகர்கள் அந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.
April 9th morning 4AM ku #FansFortRohini ipudi dhan irundhu irukum!! #Master 🔥🔥 pic.twitter.com/oDWmFwVtQS
— Rohini SilverScreens (@RohiniSilverScr) April 5, 2020