www.garudabazaar.com

Nayanthara Vignesh Shivan Latest: கடல் நடுவே Boat ride.. ஒய்யாரமாய் நயன்தாரா.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த லேட்டஸ்ட் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விக்னேஷ் சிவன், போடா போடி , நானும் ரவுடிதான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதான் மூலம் அறியப்பட்டவர்.

vignesh shivan shares Nayanthara new boat ride photoshoot

விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் பட ஹிட்டுக்கு பின் விக்கி - நயன் உறவு மலர்ந்தது. தொடர்ந்து சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.

இன்னொருபுறம் நயன்தாராவோ மாயா, கோலமாவு கோகிலா, ஐரா, அறம், இமைக்கா நொடிகள், நெற்றிக்கண், O2 என சோலோ ஹீரோயினாக பல படம் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.  அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே சுமார் 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்பட்ட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை முடித்த கையோடு தேனிலவு போன நயன்தாராவும் விக்கியும் தற்போது பல புதிய ஃபோட்டோக்களை பதிவேற்றி வருகின்றனர்.

முன்னதாக தாய்லாந்தில் ஒரு வாரம் இருந்த விக்கியும் நயனும் பின்னர் ஸ்பெயினுக்கு சென்றனர். பார்சிலோனா, வெலன்சியா, மேட்ரீட் என புதிய இடங்களில் ரொமான்டிக் போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகின்றனர். 

குறிப்பாக மேட்ரீட் நகரில் விக்கியும் நயனும், நடத்திய அசத்தல் போட்டோ ஷூட் வைரலானது. கறுப்பு நிற டி ஷர்ட் மற்றும் மினி ஸ்கர்ட் அணிந்தபடி நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் கைகளை கோர்த்தப்படி போஸ் நட்ட நடுரோட்டில் ரொமாண்டிக்காக போட்டோஷூட் செய்துள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா கடல் நடுவே போட் ரைடு செய்யும் புதிய வீடியோ,  அனைவரும் சூரிய அஸ்தமனத்தில் ரிலாக்ஸ் செய்யும் ஒரு வினோத சடங்கு நிகழ்வு உட்பட பல வீடியோக்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா போட் ரைடில் செல்கிறார்.

அவரை புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுக்கின்றனர். அவரிடம் வீடியோ எடுக்கும் முன், ‘போலாமா’ என விக்கி கேட்கிறார். இந்த வீடியோவை ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

தொடர்புடைய இணைப்புகள்

vignesh shivan shares Nayanthara new boat ride photoshoot

People looking for online information on Nayan Vikki, Nayan Vikki Honeymoon photoshoot, Nayan Vikki Marriage, Nayan Vikki new photoshoot, Nayan Vikki Wedding, Nayanthara, Vignesh shivan will find this news story useful.