LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

"மறக்கமுடியாத ஒரு படம் கொடு நெல்சன்".. ஜெயிலர் படம் குறித்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் முதல் லுக் போஸ்டர் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

Vignesh Shivan about Rajinikanth Jailer Movie First Look

Also Read | 'கோப்ரா' படத்தின் ரிலீஸ்.. திருச்சி, மதுரை, கோவை வரும் விக்ரம்.. எப்போ? எங்கே? முழு விவரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் டைட்டில் லுக் ஏற்கனவே வெளியானது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் உள்ள ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் துவங்கி உள்ளது. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

Vignesh Shivan about Rajinikanth Jailer Movie First Look

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த போஸ்டர் பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயிலர் படத்தின் முதல் லுக் போஸ்டரை பகிர்ந்து ஒரு பதிவிட்டுள்ளார்.

Vignesh Shivan about Rajinikanth Jailer Movie First Look

அந்த பதிவில், "வாழ்த்துகள் அன்புள்ள நெல்சன்!  உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்! ரஜினிகாந்தை இயக்குவது ஒரு சாதனை! எங்களுக்காக உன் சிறந்ததை நீ வைத்திருக்கிறாய் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

Vignesh Shivan about Rajinikanth Jailer Movie First Look

நெல்சன்! உங்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலால், ரஜினிகாந்த் & நமது கிங் அனிருத்துடன் இணைந்து ஒரு மறக்கமுடியாத திரைப்படத்தைக் கொடுங்கள்" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

Also Read | BREAKING: 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. இந்த ஊர்லயா?

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan about Rajinikanth Jailer Movie First Look

People looking for online information on Rajinikanth, Rajinikanth jailer Movie, Rajinikanth Jailer Movie First Look, Vignesh shivan will find this news story useful.