Viruman Logo Top
www.garudabazaar.com

ஐரோப்பிய சுற்றுப்பயணம்.. அடுத்த நகருக்கு சென்ற விக்னேஷ் சிவன் & நயன்தாரா! வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன், நயன்தாரா தங்களது ஸ்பெயின் சுற்றுப்பயணத்தில் அடுத்த நகருக்கு சென்றுள்ளனர்.

Vignesh Shivan Nayanthara Visiting Valancia from Barcelona Spain

Also Read | #47YearsofRajinism: “ஜில்லுமா.. எங்க குடும்பத்தோட சூப்பர்ஸ்டார்” - சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி..!

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.

Vignesh Shivan Nayanthara Visiting Valancia from Barcelona Spain

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின.

சமீபத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றனர்.

பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.

Vignesh Shivan Nayanthara Visiting Valancia from Barcelona Spain

பார்சிலோனா நகரில் உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பயணத்தின் அடுத்த ஊராக ஸ்பெயின் நாட்டில் உள்ள வேலன்சியா நகருக்கு சென்றுள்ளனர். இது மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள கடற்கரை நகரமாகும். பார்சிலோனா நகரில் இருந்து இந்த வேலன்சியா நகருக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் ரயில் பயணம் மூலம் சென்றனர். ரஹ்மான் இசையமைத்த ஸ்வாதேஸ் பட பாடலுடன் ரயில் பயணம் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

 

Also Read | பிரபல நெட்பிளிக்ஸ் சீரிஸின் 3வது சீசன்.. ட்ரெண்ட் ஆகும் இலங்கை தமிழ் வம்சாவளி நடிகை.!

ஐரோப்பிய சுற்றுப்பயணம்.. அடுத்த நகருக்கு சென்ற விக்னேஷ் சிவன் & நயன்தாரா! வைரல் வீடியோ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Visiting Valancia from Barcelona Spain

People looking for online information on Barcelona Spain, Nayanthara, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara will find this news story useful.