Viruman Logo Top
www.garudabazaar.com

"நல்லா உழைங்க.. நல்லா ஊர் சுத்துங்க.."ஸ்பெயின் வீதிகளில் நயன்தாரவுடன் விக்னேஷ் சிவன்! வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன், ஸ்பெயின் வீதிகளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார்.

Vignesh Shivan Nayanthara Barcelona Spain Vacation Post

Also Read | அட்லி - ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்! அவரே சொன்ன மாஸ் தகவல்

சமீபத்தில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விமானம் மூலம் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்கு சுற்றுலா சென்றனர். இது தொடர்பான விமான பயண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து ஸ்பெயின் நாட்டிற்கு செல்வதாக அறிவித்தார்.

பார்சிலோனா நகரில் நயன்தாராவை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

Vignesh Shivan Nayanthara Barcelona Spain Vacation Post

உலகப்புகழ் பெற்ற Sacrada Familia Barcelona தேவாலயத்தில் எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். முன் பின் தெரியாத ஒருவர் அப்போது நயன்தாராவை  எடுத்த போட்டோவை கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து இருந்தார்.

Vignesh Shivan Nayanthara Barcelona Spain Vacation Post

மேலும் பார்சிலோனா நகர வீதிகளில் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன் கைப்பிடித்து நடந்து வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக "வலி இல்லை என்றால் ஸ்பெயின் இல்லை கடினமாக உழையுங்கள்.. ஊர் சுற்றுங்கள்.. மீண்டும் பயணம் செய்ய கடின உழைப்புக்கு தயாராகுங்கள்.

Vignesh Shivan Nayanthara Barcelona Spain Vacation Post

தொற்றுநோய்களுக்கு மத்தியில் தொடர்ச்சியான வேலைகளுக்குப் பிறகு இந்த விடுமுறை மிகவும் தேவைப்படுவதாக உணர்கிறேன்! நீண்ட நாட்களுக்குப் பிறகு வேறொரு நாட்டில் இருப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது!! மேலும் இது புத்துணர்ச்சி‌ அளிக்கிறது !!!

உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கும், சாப்பிடுவதற்கும், இசையைக் கேட்பதற்கு மட்டுமே எனது பணத்தில் ஒரு நல்ல தொகையை சேமிக்கிறேன்" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

Vignesh Shivan Nayanthara Barcelona Spain Vacation Post

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Also Read | ஐரோப்பிய சுற்றுப்பயணம்.. அடுத்த நகருக்கு சென்ற விக்னேஷ் சிவன் & நயன்தாரா! வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Barcelona Spain Vacation Post

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara, Vignesh Shivan Nayanthara Spain Vacation will find this news story useful.