Viruman Logo Top
www.garudabazaar.com

பிரபல நெட்பிளிக்ஸ் சீரிஸின் 3வது சீசன்.. ட்ரெண்ட் ஆகும் இலங்கை தமிழ் வம்சாவளி நடிகை.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு காலத்தில் திரைப்படங்களில் தோன்றும் நடிகர் நடிகையர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிடுவது உண்டு. அதற்கும் திரைப்படங்களைத் தொடர்ந்து பத்திரிகைகள் காரணமாக இருந்தன.

Canadian actress Maitreyi Ramakrishnan Never Have I Ever Season 3

பிற்காலத்தில் வெள்ளித்திரை நடிகர்களை பற்றிய வெகுவான அறிமுகம்,  சின்னத்திரை மூலம் மக்களுக்கு கிடைத்தது. தற்போது வெப் சீரிஸ்களின் வரத்து அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. வெப் சீரிஸ்களின் மூலம் பல நடிகர்கள் பிரபலமாகி வருகின்றன. இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி வருகிறது.

Canadian actress Maitreyi Ramakrishnan Never Have I Ever Season 3

அப்படி கனடா வாழ் இலங்கை வம்சாவளி தமிழரான மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு ரசிகர்கள் ஆர்மி உருவாகி இருக்கிறது என்று சொல்லலாம். தற்போது கனடாவின் ஒன்ராறியோவில் வாழக்கூடிய 19 வயதான மைத்ரேயி ராமகிருஷ்ணன், நெட்பிளிக்ஸ் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடர் குறித்து அவருடைய ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடி பெயர்ந்தவர்கள் மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர்கள். இலங்கை தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி ராமகிருஷ்ணன் தற்போது நடித்திருக்கும் Never Have I Ever தொடருக்கு அவருடைய ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த Never Have I Ever தொடரின் மூன்றாவது சீசன் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த தொடரில் தேவி என்கிற கதாபாத்திரத்தில் மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்.

Canadian actress Maitreyi Ramakrishnan Never Have I Ever Season 3

இந்த தொடரை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும், இந்த கேரக்டர் மிகவும் வித்தியாசமான கேரக்டர். தேவி என்கிற இந்த கேரக்டரை பார்க்கும்போது அவர் எப்போது என்ன செய்யப் போகிறார் என்கிற பரபரப்பும் ஆர்வமும் இந்த சீரியஸை பார்க்கும் பார்வையாளர்களிடம் தொற்றிக் கொள்வது இயல்பு.

அந்த அளவுக்கான ஒரு கேரக்டரை மைத்ரேயி ராமகிருஷ்ணன் ஏற்று நடித்துள்ளார். இந்த தொடரின் மூன்றாவது சீசன்தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கேரக்டரை காண்பதற்கு பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். இதில் தேவியின் (மைத்ரேயி ராமகிருஷ்ணனின்) தாயாராக நடித்துள்ள பூர்ணா ஜெகநாதன் இந்திய வம்சாவளியினர் ஆவார். இதனிடையே Never Have I Ever தொடரின் நான்காவது சீசன் உருவாகிக்கொண்டு கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Canadian actress Maitreyi Ramakrishnan Never Have I Ever Season 3

People looking for online information on Maitreyi Ramakrishnan, Never Have I Ever will find this news story useful.