Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

"வா தல.. வா தல".. 25 வருசத்துக்கு அப்றம் மீண்டும் இயக்குநராகும் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் சுமார் 25 வருடங்களுக்கு பிறகு புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.

Johnny Depp directing Modigliani after 25 years ஜானி டெப்

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்தவர் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். இவருடைய நடிப்பு கெட்டப், பேச்சு ஸ்டைல் என அனைத்தையும் ஜாக் ஸ்பேரோ என்கிற பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் திரைப்பட கதாபாத்திரம் மூலம் உலகம் அறிந்தது. இந்த கதாபாத்திரம் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர்.

Johnny Depp directing Modigliani after 25 years ஜானி டெப்

கடந்த 2015-ஆம் ஆண்டு ஆம்பல் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை பிரபலமானது.

இதனைத் தொடர்ந்து 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு ஜானி டெப், ஆம்பல் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு முடிவில் ஜானி டெப்க்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில்தான் ஜானி டெப் தமது அடுத்த திரைப்படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

Johnny Depp directing Modigliani after 25 years ஜானி டெப்

கடந்த 1997-ஆம் ஆண்டு ஜானி டெப் இயக்கத்தில் ‘தி பிரேவ்’ என்கிற  திரைப்படம் வெளியானது. இதனைத்தொடர்ந்து மீண்டும் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுக்கிறார் ஜானி டெப். ஆம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலியின் பிரபல ஓவியரும் சிற்பியுமான அமெடியோ மோடிக்லியானி (Amedeo Modigliani) என்கிற கலைஞரின் வாழ்க்கை வரலாற்று படத்தைதான் திரைப்படமாக எடுக்கவிருக்கிறார் ஜானி டெப்.

இந்த படத்தை நடிகர் அல் பசினோ தயாரிக்க, ஜானி டெப் இந்த திரைப்படத்துக்கு இணை தயாரிப்பு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Johnny Depp directing Modigliani after 25 years ஜானி டெப்

People looking for online information on Johnny Depp, Modigliani will find this news story useful.