Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

"சூர்யாவோட அடுத்த பட டைரக்டர் இவர் தான்.. இன்னும் ஒரு வாரத்துல"..கார்த்தி கொடுத்த EXCLUSIVE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவின் அடுத்த படம் குறித்த  தகவல்களை நடிகர் கார்த்தி பகிர்ந்து கொண்டுள்ளார்.

Karthi Talking about Suriya Siruthai Siva Movie

Also Read | PONNIYIN SELVAN PS1: முதல்முறையாக தமிழ் சினிமாவில்.. "பொன்னியின் செல்வன்" தரவிருக்கும் மாஸ் சர்ப்ரைஸ்!

நடிகர் சூர்யா ஜோதிகா தயாரிப்பில் ஹீரோவாக கார்த்தி நடிக்கும் 'விருமன்'படம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதற்கான பல நிகழ்வுகளில் கார்த்தி சமீபத்தில் கலந்து கொண்டார். மேலும் கார்த்தி திரைத்துறைக்கு வந்து 15 வருடங்கள் ஆவதையொட்டி நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான நிகழ்ச்சியில் (Karthi Fans Festival) நடிகர் கார்த்தி கலந்து கொண்டார்.

Karthi Talking about Suriya Siruthai Siva Movie

கார்த்தி திரைத்துறைக்கு வந்து 15 வருடங்கள் ஆவதையொட்டி கார்த்தி பணியாற்றிய இயக்குனர்களில் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் வீடியோ வழியாக தோன்றி நடிகர் கார்த்தியை வாழ்த்தினர்.

Karthi Talking about Suriya Siruthai Siva Movie

அப்போது நடிகர் கார்த்தி இயக்குனர் சிவா குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும் "சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் சிவா இயக்க உள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 நாளில் ஆரம்பிக்கப்பட உள்ளது" என்றும் கூறியுள்ளார்.

மறுபுறம் சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தது.

Karthi Talking about Suriya Siruthai Siva Movie

மேலும் சூர்யா நடிப்பில் வெளிவந்த தேசிய விருதுகளை வென்ற சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கிலும் சூர்யா ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார்.  சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்த படத்தில் தமிழ் மொழியில் நடித்த அபர்னா பாலமுரளியின் பொம்மி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா மதன் நடிக்கிறார்.

Also Read | தனது கணவரின் பிறந்தநாள்.. குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்திய காஜல் அகர்வால்!

"சூர்யாவோட அடுத்த பட டைரக்டர் இவர் தான்.. இன்னும் ஒரு வாரத்துல"..கார்த்தி கொடுத்த EXCLUSIVE அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Karthi Talking about Suriya Siruthai Siva Movie

People looking for online information on Karthi, Karthi Talking about Suriya, Siruthai Siva, Suriya will find this news story useful.