Cadaver D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

நயன் திருமண Lookல் ஆர்த்தி.. விக்னேஷ் சிவன் போட்ட 'அசத்தல்' கமெண்ட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல காமெடி நடிகையான ஆர்த்தி, கிரி, படிக்காதவன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.

harathi imitates nayanthara wedding look vignesh shivan reacts

அதே போல, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் தோன்றி இருந்த ஆர்த்தி, மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு ரவுண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் தனது கணவர் மற்றும் நடிகரான கணேஷ்கருடன் பிக்பாஸ் ஜோடிகள் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் திருமண புகைப்படத்தை ஒப்பிட்டு நடிகை ஆர்த்தி ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படமும், அதற்கு நயன்தாராவின் கணவர் மற்றும் இயக்குனரான விக்னேஷ் சிவன் கொடுத்த ரியாக்ஷனும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

harathi imitates nayanthara wedding look vignesh shivan reacts

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர், பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 09 ஆம் தேதியன்று திருமணமும் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் வைத்து நடந்த இவர்களின் திருமணத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் ஷாருக்கான், இயக்குனர் மணிரத்னம், நடிகர் சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டிருந்தனர்.

harathi imitates nayanthara wedding look vignesh shivan reacts

மேலும், திருமண நாளில் சிவப்பு புடவையில் தோன்றி இருந்த நயன்தாராவின் தோற்றம் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. அந்த வகையில், நயன்தாரா கல்யாண உடையை போலவே, தானும் ஒரு உடை அணிந்தபடி ஆர்த்தி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் ஒரு புறம் நயன்தாராவின் திருமண புகைப்படமும், மறுபுறம் அதே உடையில் ஆர்த்தி இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மேலும், தனது கேப்ஷனில், "என்ன கொடுமை இது 😆😂Expectation vs reality" என தனது லுக்கை அவரே கலாய்த்து குறிப்பிட்டிருந்தார்.

harathi imitates nayanthara wedding look vignesh shivan reacts

ஆர்த்தியின் இந்த ட்வீட்டை கவனித்த இயக்குனர் விக்னேஷ் சிவன், அதனை பகிர்ந்து, "நீங்கள் இன்னும் அழகாக இருக்கிறீர்கள் ஆர்த்தி" என குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவின் திருமண லுக்குடன் இணைத்து, ஆர்த்தி போட்ட ட்வீட்டும், அதற்கு விக்னேஷ் சிவன் கொடுத்த ரியாக்ஷனும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

harathi imitates nayanthara wedding look vignesh shivan reacts

அதே போல, பிரபல நடிகை ப்ரியா ஆனந்தும் இந்த புகைப்படத்தினை பார்த்து, "நான் இரண்டு அழகான பெண்களை பார்க்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

harathi imitates nayanthara wedding look vignesh shivan reacts

People looking for online information on Harathi, Nayanthara, Vignesh shivan will find this news story useful.